Recent Post

வழிகாட்டல் நிகழ்ச்சி - க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதி உயர்தரத்திற்கு தெரிவாகின்ற மாணவர்களுக்கானது

 




இம்முறை க. பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு பெற்றவர்களுக்கான கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பின்
கல்வி ஊக்குவிப்பு வாரம்

கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி பல்வேறு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதி உயர்தரத்திற்கு தெரிவாகின்ற மாணவர்கள் மற்றும் சித்தியடையாத மாணவர்களுக்கு "வெற்றியை நோக்கி" என்ற தொனிப்பொருளில் ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியை நடாத்தி வருகின்றது.

குறித்த நிகழ்ச்சியை இம்முறை "கல்வி ஊக்குவிப்பு வாரம்" என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து 5 நாட்களுக்கு zoom வழியாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு துறை குறித்தும் சில விரிவான தகவல்கள் பகிர்ந்து கொள்ளுமுகமாக பிரத்தியேகமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த துறையில் Role Model களையும் அறிமுகம் செய்து அவர்களது அனுபவங்களையும் பகிர எதிர்பார்க்கின்றோம்.
______

நிகழ்ச்சி ஏற்பாடுகள் பின்வரும் ஒழுங்கின் கீழ் நடைபெறவுள்ளது.

முதல் நாள் (10.10.2021)

உங்களுக்கு விருப்பமான துறை எது என்பதை கண்டறிவதற்கான நுட்பங்கள்.

உயர்தரம் தெரிவானவர்கள் அடுத்த இரண்டாண்டுகளை கல்விக்காக திட்டமிடுவதற்கான வழிகாட்டல்கள்.

இரண்டாவது நாள் (11.10.2021)

கலை மற்றும் வர்த்தகப் பிரிவு பாடத் தெரிவு தொடர்பான வழிகாட்டல்கள்.

மூன்றாவது நாள் (12.10.2021)

விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவு தொடர்பான வழிகாட்டல்கள்.

நான்காவது நாள் (13.10.2021)

தொழில் நுட்பப் பிரிவு மற்றும் கல்வியல் கல்லூரிக்கு தயாராகுதல் தொடர்பான வழிகாட்டல்கள்.

ஐந்தாவது நாள் (14.10.2021)

சித்தியடையாத மாணவர்களகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான...

உயர்தரம் கற்க போதிய  பெறுபேறு இல்லை என்பது உயர்கல்வி பெற தடையல்ல என்ற தலைப்பிலான வழிகாட்டல்கள்.

13 வருட கட்டாயக் கல்வித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்த சில தெளிவுகள்.

தொழிநுட்பத் துறைகளில் இலங்கை மற்றும் சர்வதேச ரீதியாக இருக்கின்ற வாய்ப்புக்கள் பற்றிய தகவல்கள்.
______

தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில் இலங்கையில் எந்தப் பகுதியிலிருந்தும் zoom ஊடாக இணைந்து பயன்பெறலாம்.

குறித்த நிகழ்ச்சி The Young Friends மற்றும் Madawala News பேஸ்புக் பங்கங்களினூடாக live ஒளிபரப்பாகும். நிகழ்ச்சிக்கான அனுசரணையை செரண்டிப் கல்வி நிறுவனம் (SEF) வழங்குவதோடு, ஊடக அனுசரணையை Madawala News மற்றும் கந்துரட்ட எப்.எம். முஸ்லிம் சேவை ஆகியன வழங்குகின்றன.

இணைந்து கொள்ள விரும்புகின்ற மாணவர்களும், பெற்றோரும் பின்வரும் WhatsApp link களில் இனைந்து மேலதிக நகல்களை பெறலாம். அல்லது The Young Friends பேஸ்புக் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

(கீழுள்ள WhatsApp குழுமங்களில், இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பெறுபேறு பெற்ற மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் மாத்திரம் இணையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்)

தகவல்களுக்கு:
0773509609 / 0740069101

Follow this link to join my WhatsApp group:















 

No comments