நிகழ்நிலை / தொலைக்கல்வி நடவடிக்கைகளுக்காக வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு பிரதேச கற்றல் மத்திய நிலையங்கள் அமைத்தல்
கல்வி அமைச்சின் சுற்றறிக்கை - 2021.06.17
நிகழ்நிலை / தொலைக்கல்வி கல்வி நடவடிக்கைகளுக்காக வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை தாபித்தல்
கோவிட் தொற்றுநோய் காரணமாக வருடத்தின் நீண்ட காலப்பகுதி பாடசாலைகளை நடத்த முடியாமையால் கல்வி நடவடிக்கைகளை ஏகவினமாக நடத்திச் செல்ல முடியாமை காரணமாக இணையவழி முறைமையின் கீழும் தொலைக்கட்சி, வானொலி மற்றும் கயாற்றல் பொதி பெற்றுக் கொடுத்தல் முதலிய பல்வேறு முறைகளை பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக நடத்திச் செல்ல மாகாண மட்டத்தில், வலய மட்டத்தில் மற்றும் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்கள் தொடர்பில் பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
என்றாலும் சமிக்ஞை நழுவல் வசதி இல்லாமை, இணையத்தள வசதி இல்லாமை போன்ற கணணியை ஒட்டிய துணை சாதனங்கள் இல்லாமை காரணமாக இணையந்தள/ நிகழ்நிலை செயற்பாடுகள் ஊடாக தொடர்பு கொள்ள முடியாத மாணவர்கள் குறித்து, சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கைக்கொண்டு சிறு குழுக்களாக கூடி கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய நிலையங்களை கிராமிய மட்டத்தில் ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சானது கல்வி மறுசீரமைப்புகள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க, அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சு, டிஜிட்டல் தொழினுட்பம் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து திட்டமிட்டுள்ளது,
மேலும் வாசிக்க...
No comments