கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
கல்வி அமைச்சு
வெளியிட்ட முக்கிய தகவல்..!!சாதாரண தொலைபேசியில் மூலம் இலவசமாக
கல்வியைக் கற்கலாம் ..! கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது..!! மாணவர்களுக்கு போய் சேரும் வரை அனைவரும் முடிந்தளவு பகிருங்கள்
1377 இலக்கத்துடன் தொடர்புகொண்டு சாதாரண தொலைபேசியில் கல்வியைக் கற்கலாம் – கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.இணையவழியில் கற்பதற் கான தகவல் தொடர்பு சாதனங்கள் இகல்லாத மாணவர்கள் சாதாரண தொலைபேசி ஊடகக் கற்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சாதாரண தொலைபேசியில் 1377 என்ற கலக்கத்தை அழுத்தி உரிய தொடர்பு மொழியை தெரிவு செய்து கொண்டு, திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை மாணவர்கள் தமக்குத் தேவையான பாட விளக்கங்களையும் ஐயங்களையும் கேட்டறிய முடியும் எனவும், இதற்காக தொலைபேசிக் கட்டணம் எதுவும் குறவிடப்படமாட்டாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இக்கற்றல் செயற்பாடுகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதேவேளை இணையவழி கற்றல் நடவடிக்கைகள் 5௦ சதவீதமான மாணவர்களைச் சென்றடையவில்லை என்ற தகவல்கள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில், சாதாரண தொலைபேசியில் கற்கின்ற வசதி செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பாடங்களில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம்இவ்வாண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, வீட்டிலிருந்து தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர, 1377 எனும் இலக்கம் மூலமாக விசேட தொலைபேசி சேவையை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு இவ்விசேட இலவச தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டு வேண்டுகோளுக்கிணங்க, டயலொக் நிறுவனத்தின் பிரதான பங்களிப்புடன், தபால் மற்றும் தொலைத்தொடர்புஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் மொபிடெல், எயார்டெல், ஹட்ச், ஶ்ரீ லங்கா ரெலிகொம், லங்கா பெல் ஆகிய தொலைபேசி சேவை வழங்குனர்கள் இணைந்து இம்முயற்சியை மேற்கொண்டுள்ளன.பெற்றோர் எந்தவொரு வலையமைப்பின் ஊடாகவும், 1377 எனும் இலக்கத்தை அழைப்பதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பை வழங்க முடியும். இந்த சேவைக்கு தொலைபேசி கட்டணம் எதுவும் இல்லை என்பதோடு, சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம்.ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இதற்காக தொடர்புபடுத்தப்படுவார்கள் என்பதோடு, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தாய்மொழி தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்கள் தொடர்பான எந்தவொரு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இதன் மூலம் பதில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments